இராசி பாளையம் ஊராட்சியில்ரூ.45 லட்சத்தில் துணை சுகாதார நிலையம்!

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் வடக்கு ஒன்றியம் இராசிபாளையம் ஊராட்சியில் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் அமைக்கும் பணிக்கு கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். சூலூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் சிபி K.செந்தில்குமார், இராசிபாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ப. மணியன், கிளை செயலாளர்கள் பிரபாகரன், சூசைநாதன், முன்னாள் வார்டு உறுப்பினர் பிரகாஷ், சூலூர் வடக்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் சந்தோஷ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.