தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக தேனியில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தென் மண்டல அமைப்பு செயலாளர் குமரேசன் தலைமையிலும் மாநில இணைச் செயலாளர் சுந்தர பாண்டி முன்னிலையில் பதினாறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி செயலர்கள் பம்ப் ஆப்ரேட்டர்கள் மற்றும் மக்கள் நல பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் ஏராளமானனோர் ஒரு கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர் அவர்களின் கோரிக்கை தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை பத்தாயிரம் ஆக வழங்க வேண்டுமென வலியுறுத்தியும் 1 .6 .2009 முதல் அரசாணை எண் 234 இன் படி மக்கள் நலப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு காலம்முறை ஊதியத்தை தற்போது காலம் முறை ஊதியமாக நிர்ணயித்து பணி நியமனம் செய்ய வலியுறுத்தியும் மேல்நிலை நீர்த்தக்கத் தொட்டியை இயக்குபவர்களின் பனிக்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு கால முறை ஊதியம் 15000 வழங்க வேண்டும் எனவும் ஊராட்சி செயலர்கள் தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றிய பதிவறை எழுத்திற்கு பொருந்தும் அனைத்து சலுகைகளும் வழங்கிட வேண்டும் எனவும் எம் ஜி என் ஆர் ஜி எஸ் திட்டத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரியும் கணினி உதவியாளர்கள் பணி நிரந்தரம் செய்திட அரசாணை எண் 37 வெளியிட்ட பின்னரும் இதனால் வரை பணி நிரந்தரம் செய்யவில்லை எனவும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் வட்டார மாவட்ட சுகாதாரத்துறை ஒருங்கிணைப்பாளர் பணிக்கான கருத்தில் கொண்டு வட்டார மாவட்ட அளவில் பணி நிரந்தரம் செய்திட வலியுறுத்தியும் மூணு ஆண்டுகள் பணி முடித்த தூய்மை பணியாளர்களின் சிறப்பு காலம் முறை ஊதியத்திலும் 10 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் காலம் முறை ஊதிய கட்டுக்குள் மாற்றம் செய்து நகராட்சி நிர்வாக துறையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் பெறும் ஊதியத்தை வழங்கிட வேண்டும் எனவும் கிராம சுகாதார ஊக்குனர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் ஊராட்சி ஊதிய மூலம் வழங்கிட வேண்டும் எனவும் தூய்மை பணியாளர் காவலர்களுக்கு குடும்ப நலநிதி பிடித்தம் செய்து அவர்கள் இறப்பினை ஏய்தும் போது 5 லட்சம் வழங்கிட வேண்டும் எனவும் மக்கள் நல பணியாளர் கடந்த 19 .8 .2014 ஆம் தேதி அன்று மாண்பை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பினை நடைமுறை படுத்த வேண்டுமெனவும் ஊராட்சி செயலருக்கு தேர்வு நிலை சிறப்பு நிலை தேக்க நிலை ஊதியம் வழங்கிட வேண்டும் எனவும் கிராம ஊராட்சியில் பணிந்து புரிந்து வரும் ஊராட்சி செயலர்கள் தூய்மை காவலர்கள் தூய்மை பணியாளர்கள் மேல்நிலை நீர் தேக்கு தொட்டி இயக்குபவர்கள் சுகாதார ஊக்குனர்கள் ஆகியோர்களுக்கு கிராம ஊராட்சி ஊதிய கணக்கில் ஊதியம் வழங்கி ஆணை வழங்கிஅதனை பிரதி மாதம் கடைசி வேலை நாளில் பெரும் வகையில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம ஊராட்சி செயலர்களுக்கு கிடைத்திட வழி செய்திட வேண்டும் எனவும போன்ற பதினாறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோசங்கள் . எழுப்பினர் . இந்த கோரிக்கையில் நிறைவேறாவிட்டால் பின்வரும் இயக்க நடவடிக்கைகள் மேற் கொள்ள படும் என அக்டோபர் 29ஆம் தேதி ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் செய்வோம் எனவும் நவம்பர் 24ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் செய்வோம் எனவும் தென் மண்டல அமைப்புச் செயலாளர் குமரேசன் தெரிவித்தார்